ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீச்சு.. (UPDATE)

ஓய்வூதியம் பெறும் கால எல்லையை (12 வருடங்கள்) பூர்த்தி செய்யாது இராணுவத்தில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்றபட்டமையை அடுத்தே பொலிஸாரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதல் இவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPDATE – ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு.

கொழும்பு கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

உனமுற்ற இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கோரி இன்று(07) கொழும்பு கோட்டை பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவானிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த கோரிக்கையானது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உனமுற்ற இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை வீதியில் கடும் வாகன நெரிசல் எற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.