வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், சீனத் தூதுவர் யீ ஸியான்லிங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று(08) இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தில் குறித்த இந்த சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
சீனத் தூதுவரினால் வருடாந்தம் வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கும் இரவுப் போசன விருந்துபசாரத்திற்காக இவ்வாறு வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு வேறு வகையிலானது அல்ல என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் சீனத் தூதுவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களையும் மற்றும் நிதி அமைச்சரையும் விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.