மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமருக்கு எதிராக வழக்கு..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்கு தொடர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிணைமுறி மோசடிகளுக்கு பிரதமர் பொறுப்புக்கு கூறவேண்டும் எனத் தெரிவித்து பாராளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டுவரவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்திருந்தனர்.

எனினும், பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குற்றவியல் பிரேரணை எதிராக பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவதாக அறிவித்ததை அடுத்து குற்றவியல் பிரேரணை இலகுவாக தோல்வியடையும் என கூட்டு எதிர்க்கட்சி குறித்த யோசனையை கைவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஆகவே முறி மோசடிகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக தனிப்பட்ட வழக்கு தொடர்வது திறந்த நடவடிக்கை என கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். அதேவேளை குறித்த வழக்கு இந்த வாரத்தில் பதிவு செய்யப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.