சுமார் 45 கோடி ரூபா பெறுமதி கொண்ட கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்பு.

களணி – பெத்தியாகொட பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து சுமார் 45 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 31 கிலோகிராம் கொக்கேய்ன்  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

 சீனி கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இது கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.