கட்சி மறுசீரமைக்கப்படுதல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநிதித்துவப்டுத்தும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வரவு செலவுத் திட்டம் நிறைவு பெற்ற பிறகு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் கட்சி மறு சீரமைக்கப்படுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.