மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி விளக்கமறியலில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று(11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் திருத்த மனுவொன்றை முன்வைத்துள்ளார்.
பொருத்தமான பிணை அடிப்படையில் தன்னை விடுவிக்குமாறு அவர் அந்த மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போலி ஆவணத்தை தயாரித்த குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க, பிணைக் கோரி மோஷன் மூலம் மேற்கொண்ட கோரிக்கையை கொழும்பு மேல் நிதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.