நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை கோவை வௌியீடு.

நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் ஆலோசனைக் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறித்த இந்த ஆலோசனை கோவை நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதல் அறை ஆண்டுக்குள் இந்த ஆலோசனை கோவையுடாக பாரிய பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.