முஸ்லிம் தீவிரவாதத்தினை எதிர்க்க வந்த ட்ரம்ப் ‘முஸ்லிம் வம்சாவளி’ என பாகிஸ்தான் அலைவரிசை வெளிச்சம்..

அமெரிக்காவினது புதிய ஜனாதிபதியின் வரவு மக்கள் மத்தியில் இன்னும் பெரும் பரபரப்பாய் பேசப்படுகின்ற ஒரு தொனிப்பொருளாக காணப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் குறித்து சர்வதேச ரீதியாகவும், சர்வதேச ஊடகங்களும் பலவிதமாய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

அது எவ்வாறாயினும், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது பாகிஸ்தான் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் காண்பிக்கப்பட்ட செய்தி குறித்து இன்று சர்வதேசம் முழுவதும் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அதில் டொனால்ட் ட்ரம்ப் 1946ம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்ததாக கூறப்படுகின்றது

இது குறித்து நியோ செய்திச் சேவை மேலும் கூறுகையில், ட்ரம்ப் 1946ம் ஆண்டு ‘முஸ்லிம் குடும்பத்தில்’ வஜீரிஸ்தானில்  பிறந்துள்ளார் . ட்ரம்ப் சிறுவயதில் ‘தாவுத் எப்ரஹாம் கான்’ எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் இனது சிறுவயது புகைப்படமொன்றினையும் வெளியிட்டுள்ள குறித்த செய்திச் சேவையானது, அவரது உண்மையான பெற்றோர்கள் வாகன விபத்தொன்றில் உயிர் துறந்ததாகவும்,அதன் பிற்பாடு பிரித்தானிய இன குடும்பத்தினரால் 1955ம் ஆண்டு தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பராக் ஒபாமா ஜனாதிபதி ஆன சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செய்தியொன்று பரவியிருந்த நிலையில் ஒபாமா கென்யாவில் பிறந்தவர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், 2011ம் ஆண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பராக் ஒபாமா தான் அமெரிக்காவில் பிறந்தமைக்கான சான்றினையும் காண்பித்திருந்தார்.

ட்ரம்ப் இனது சிறுவயதுப் புகைப்படம்..

3a5e5b3500000578-3935094-image-a-70_1479140558149

எவ்வாறாயினும் குறித்த செய்திக்கு பரவலாக கருத்துக்கள் சமூக வலையத்தளங்களில் பரவி வருகின்றது.

3453645646