பந்து தலையில் தாக்கி ஆஸி. வீரர் வோக்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியின்போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பேட்ஸ்மேன் வோக்ஸ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெர்த் நகரில் இன்று(17) தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா-டாஸ்மேனியா ஆகிய அணிகள் விளையாடின. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக அந்த அணியின் ஆடம் வோக்ஸ், கேமரான் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர் பந்தை அடிக்காமல் தலையை குனிந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பந்து வேகமாக அவரது ஹெல்மெட்டை தாக்கி, தலையில் அடிபட்டது.

இதனால் கடுமையான வலி ஏற்பட்டதால் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவருக்கு பயிற்சியாளர்கள் உதவி செய்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வோக்ஸ் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயமடைந்ததால் அவருக்கு போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு, மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே ஷெபீல்டு ஷீல்டு போட்டியின்போது, முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கியதில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Image result for voges injured in head

Related image

Image result for voges injured in head