இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கான விஷேட வேலைத் திட்டம் ஒன்றை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமை(19) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விஷேட ஒரு நாள் சேவை நடைபெறும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 862 217 அல்லது 0112 862 228 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.