யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை -சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவற்துறை அதிகாரிகள் 5 பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதவான் நிதிமன்றத்தில் சந்தேகநபர்களை இன்று(18) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி நள்ளிரவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம் -கொக்குவில் பிரதேசத்தில் உந்துருளி விபத்தில் உயிரிழந்த நிலையில் , பின்னர் அவர்கள் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலே உயிரிழந்தாக வௌிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.