பொரலஸ்கமுவ, பெபிலியான ஆடைக் களஞ்சியசாலையில் பரவிய தீ குறித்து மின் பொறியியலாளர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர்களது பரிசோதனை அறிக்கைகள் இன்று பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளன.
தற்போது வரையில் இடம்பெற்றுள்ள விசாரணைகளின் அடிப்படையில் ஆடையகத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தீ குறித்த பரிசோதனைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். தீப்பிடிக்க காரணமாக இருந்தவை குறித்து உயர் தொழில்நுட்பம் முறைமைகளை கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
சோதனைகளுக்காக ஆடையக வளாகத்திலுள்ள CCTV கமராக்களும் சோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


