2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதத்தை காலை 9.30 மணிமுதல் மாலை 6.30 வரையிலும் செனல் ஐ தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இன்று(21) முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலும் அஞ்சல் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கு கட்சித்தலைவர் அங்கீகரித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(நன்றி – அழகன் கனகராஜ்)