முதன்முதலாக இலங்கையில் தடம்பதிகிறது Huawei GR5 2017.

தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது.

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, கொழும்பில் சிங்கர் Lifestyle Festival கண்காட்சியில் வைபவரீதியாக புத்தம் புதிய Huawei GR5 2017 உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளன.

தென்கிழக்கு பிராந்தியத்தில், இலங்கையில் முதன் முதலாக Huawei GR5 2017 எனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைப்பெற்ற Lifestyle Festival கண்காட்சியில் வைபவ ரீதியாக இந்த புத்தம் புதிய உற்பத்தி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் Huawei நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷுண்லி வாங், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான கல்ப பெரேரா, சிங்கர் பீஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளரான குமார்சமரசிங்க ஆகியோர் குறித்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.