சர்ச்சைக்குரிய எவன்காட் நிறுவன கப்பல் குறித்து இன்று இறுதித் தீர்ப்பு..

காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய எவன்காட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை, விடுவிப்பதா இல்லை உடைப்பதா என்பது தொடர்பில் காலி பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று(23) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

குறித்த கப்பல் தொடர்பான வழக்கு கடந்த 9ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, கப்பலை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி, எனினும் 2 லட்சம் டொலர்கள் பிணையுடனேயே அதனை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை முன்வைத்தார்.

எனினும் குறித்த கப்பல் ஒரு வருடமாக நங்கூரமிடப்பட்டுள்ளதால், அதனை பராமரிப்பதற்கு 77 மில்லியன் ரூபாய் வரையில் செலவாகி இருப்பதாகவும், தொடர்ந்தும் குறித்த கப்பலை பராமரிக்க முடியாது என்றும் எவன்காட் நிறுவனத்தின் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த கப்பலால் ஏற்படக்கூடிய கடற் சூழல்பாதிப்புக்குறிய பொறுப்பினை அரசாங்கமே வேண்டும் என்றும் கூறினார்.

இவற்றைக் கருத்தில் எடுத்துள்ள நீதிமன்றம் இன்று(23) தீர்ப்பளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.