ஒழுக்காற்று விதிகளை மீறியதற்காக சுரங்க லக்மாலுக்கு அபராதம்.

ஒழுக்காற்று விதிகளை மீறியதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு போட்டிச் சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கடந்த திங்கள்(21) நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் போது சிம்பாப்வே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாமு ஷிபாபாவுக்கு பந்து வீசிய லக்மால், அவரை நோக்கி ஆபத்தான முறையில் பந்தை எறிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கேற்ப போட்டிச் சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டனைப் புள்ளியாக (demerit points) இரண்டு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

வீரர் ஒருவர் 24 மாதகாலத்தில் நான்கு தண்டனைப் புள்ளிகளை பெற்றுக் கொள்வாராயின் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளிலோ அல்லது இரண்டு ரி-ருவென்ரி போட்டிகளிலோ தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.