பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. எம். எல். சரத்சந்திர, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.