இலங்கையில் கார் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் நடவடிக்கை ஒன்றினை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின், மருமகன் அர்ஜுன் அலோசியஸ் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஜப்பானின் பியூஜி ஹெவிடியுட்டி (Fuji heavy duty) நிறுவனத்துடன் இணைந்து தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.
கார் தொழிற்சாலையை அமைக்கும் நோக்கில் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாகவும், குறித்த இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் முதல் மோட்டார் வாகனத்தை அடுத்தாண்டில் சந்தையில் அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஜப்பானின் பியூஜி ஹெவிடியுட்டி நிறுவனம் உலகின் மிகவும் உயர்தரத்தில் வாகனம் தயாரிக்கும் நிறுவனமாகும்.
இலங்கை மத்திய வங்கி பினை முறி தொடர்பில் Fuji heavy duty பாரிய மோசடி ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பதவி விலகி இருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.