பிரபு பாதுகாப்பு பிரிவு வாகனங்களுக்குமா 25000 ரூபா அபராதம்?

பிரபு பாதுகாப்புப் பிரிவு வாகனங்களுக்கு 25000 ரூபா அபராதம் செல்லுபடியாகுமா என வாகன சாரதிகள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீதிகளில் மிகவும் பாதுகாப்பற்ற வகையில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தும் பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு வாகனத் தொடரணிகளுக்கு புதிய 25000 ரூபா அபராதம் செல்லுபடியாகுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதிக வாகன நெரிசல் காணப்படும் நேரங்களிலும் பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு வாகனங்கள் ஊடே புகுந்து வேகமாக செல்வதாகவும் இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு சாரதிகளுக்கு ஒரு சட்டமும் தமக்கு வேறும் ஓர் சட்டமும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு வாகனத் தொடரணிகளை தடுத்து நிறுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் பிரபுக்கள், பாதுகாப்புப் பிரிவு சாரதிகள் உள்ளிட்ட அனைத்து சாரதிகளுக்கும் ஒரே விதமாக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென சாரதிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.