உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட ஐந்து பேர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஒலிபெருக்கியினால் வெளியாகும் சத்தத்தினால் பிரதேச மக்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் சுகாதாரக் கேடு ஏற்படும் எனவும் தெரிவித்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிந்த ஜயசிங்க, டிரேன் அலோக் ,டொக்டர் காலிங்க கலுப்பெரும, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, கமலேஸ் ஜோர்ஜ் பிள்ளே ஆகியோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
கொழும்பு 5 அலன் மெதினியாராமய விஹாரைக்கு அருகாமையில் தாம் வசித்து வருவதாகவும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையில் விஹாரையின் ஒலி பெருக்கி பாரிய சத்தத்துடன் ஒலிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கடுமையான சத்தம் எழுப்பப்படுவதனால் பிரதேச மக்களின் உள நிலை பாதிக்கப்படுவதுடன் சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படக் கூடும் எனவும் பிள்ளைகளினால் கல்வி கற்க முடியவில்லை எனவும் தலைவலி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.