அநுர குமார திஸாநாயக்கவிற்கு அரசிடமிருந்து உயரிய பதவி..

முன்னாள் விவசாயத்துறை அமைச்சருடன், விவசாயம் தொடர்பாக அனுபவம் கொண்ட நபரான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமரா திஸாநாயக்கவை விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(24) நாடாளுமன்றத்தில் வைத்து விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

விவசாயத்துறை உட்பட நான்கு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் இணைந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 5 ஆம் நாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.