கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்றைய தினம்(25) காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, 2016 நவம்பர் மாதம் 25ஆம் திகதி அதன் அனர்த்தம் தவிர்ப்புத் தளத்திலிருந்து தன்னியக்க வியாபார முறைமையினைப் (ATS) பயன்படுத்தி வியாபாரத்தினை மேற்கொள்ளவுள்ளது.
ஏதேனும் ஓர் அனர்த்தம் நேருகையில், சந்தைச் செயற்பாடுகளில் அக்கறையுடைய அனைவரும் அனர்த்தத் தவிர்ப்பு தேவைப்பாட்டின் தயார் நிலையினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சித்திட்ட நடவடிக்கை சந்தையில் பரந்தமட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டமிட்ட பயிற்சி நடவக்கையினை அனர்த்தம் தவிர்ப்பு தளத்திலிருந்து மேற்கொள்வதற்காக, மு.ப 11.30 தொடக்கம் பி.ப 12.30 வரையான ஒரு மணித்தியாலத்திற்கு வியாபாரத்தினை இடைநிறுத்துவதற்கு கொழும்பு பங்குப்பரிவர்த்தனை தீர்மானித்துள்ளது.
இந்த அசௌகரியத்தை அனைவரும் கவனத்திற் கொள்ளுமாறு கொழும்பு பங்குப்பரிவர்த்தனை தாழ்மையுடன் வேண்டுகின்றது.