முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக விசாரணை நடத்த அரசு தீர்மானம்..

அமைச்சரவையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிற்பாடு, ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பிலான விபரங்கள் அந்தந்த நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.