நூரி தோட்ட முகாமையாளர் கொலை – 18 பேருக்கு மரண தண்டனை விதிப்பு..

அவிசாவளை – தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் நிஹால் பெரேரா கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் அத்தகொட்டா உட்பட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய 3 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முகாமையாளரின் காவலாளிகள் மூவர் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்தனர்.