ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் போது வெளியான தகவலுக்கு அமைய சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம், பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சந்தேகநபரின் உருவப்படம், குற்ற அறிக்கைப் பிரிவு பொலிஸ் வரைபட கலைஞரின் ஊடாக வரையப்பட்டுள்ளது.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க இவர், 05 அடி 08 அங்குலம் உயரமானவர் என்றும் கண்கள் இரண்டும் பழுப்பு நிறத்திலும் தோல் மாநிறமாகவும் கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள், 0112422176, 0112380380, 0718305528, 0718349505, 0773291500, 0718070207 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
