அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமை உள்ளிட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள பாதிப்பை ஏற்படுத்தும் யோசனைகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை மருத்துவமனை மட்டத்தில் இன்று(28) முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நவீன் டீ சொய்சா அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ நிலையங்களும் மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் புகைத்தல் பொருள் உற்பத்தி நிறுவனங்களிடம் 600 மில்லியன் ரூபாய் அறவீடு செய்யும் அரசாங்கத்தின் யோசனையானது, மருத்துவ சபையின் அடிப்படை கொள்கைகளையும் பாதிப்புக்கு உட்படுத்தியுள்ளதாக நவீன் டீ சொய்சா மேலும் குறிப்பிட்டுள்ளார்.