Google map இல் டொனால்ட் ட்ரம்ப் இனது Trump Tower இற்கு புதிய பெயர் மாற்றீடு.. (PHOTOS)

யார் என்னதான் சொன்னாலும் அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதியாக பிரபல தொழிலதிபர் டொனால்ட் ட்ரம்ப் திகழ்கிறார். என்றாலும், ட்ரம்ப் இற்கு எதிராக பல கோணங்களிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணமுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் புதுவித சர்ச்சையாக  Trump Tower அதிகளவு பேசப்படுகின்றது.

ஆம் ட்ரம்ப் இற்கு எதிராக  Google நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. Google இல் நடந்த தவறு குறித்து முழு உலகமுமே தனது அவதானத்தினை அதன் பக்கம் திருப்பியுள்ளது. குறித்த தவறினை செய்துள்ளதும் Google இனுள்ளே பணிபுரியும் ட்ரம்ப் இற்கு எதிரான பணியாள் ஒருவராவர்.

Google map இல் Trump Tower என குறிப்பிடப்படும் இடமானது, Dump Tower என Google map இல் பணிபுரியும் நபரொருவரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெடு நேரமாக குறித்த பெயர்மாற்றம் Google map இல் மற்றம் செய்யாமல் இருந்துள்ளது.

இது குறித்து Google நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீக்கிரமே குறித்த தவறினை நிறுவனம் சரிசெய்ததாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இதை செய்தவர் குறித்து எந்தத் தகவலையும் GOOGLE நிறுவனம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது…

மாற்றீடு செய்த Trump Tower பெயர்…

1

2