கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரபல அழகிகள் குறித்த பட்டியலை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அழகு, அறிவு, சாதனைகள், கவர்ச்சி, உலக அளவில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளார்கள் என்பதனை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
Selena Gomez

இளமை துள்ளலுடன் முதலிடத்தில் இருக்கிறார் Selena. நடிகை, மொடலிங், பாடகி என பல்வேறு பரிமாணங்களோடு கலக்கி வரும் இவருக்கென அமெரிக்காவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. எந்தவொரு செயலை செய்தாலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செய்வது இவரது வெற்றிக்கான ரகசியம் ஆகும்.
Liza Soberano

தனது குழந்தை முகத்தால் அமெரிக்கா ரசிர்களை கவர்ந்துள்ள Liza இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமாவின் மூலம் உலகுக்கு அறிமுகமான இவர், தற்போது வரை அதே துறையில் வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார். இவர் அதிகமாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் வாயிலாகவே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகியுள்ளார். தற்போது கூட ரொமாண்டிக் கொமடி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
Im Jin-Ah

சீனா நாட்டை சேர்ந்த இந்த அழகி Nana என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். நடிகையாக இருக்கும் இவர் 2014 ஆம் ஆண்டில் வெளியான Independent Womens பட்டியலில் முதல் இடத்தை பெற்றார். இதே பட்டியல் 2015 ஆம் ஆண்டில் வெளியானதில் இவர் தான் முதலிடம். திரைத்துறையில் ஜொலித்து வரும் இவர், இந்த ஆண்டு அழகிகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கிறார்.
Deepika Padukone

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆவார். கவர்ச்சியான கண்கள் மற்றும் அழகான உடல்வாகு கொண்ட இவர், தற்போது வரை பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் பல்வேறு பிராண்டுகளின் தூதூவராகவும் இருக்கிறார்.பாலிவுட்டின் பிரபல நடிகை ஆவார். கவர்ச்சியான கண்கள் மற்றும் அழகான உடல்வாகு கொண்ட இவர், தற்போது வரை பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் பல்வேறு பிராண்டுகளின் தூதூவராகவும் இருக்கிறார்.
Pixie Lott

பிரித்தானியாவின் பிரபல பாப் பாடகி ஆவார். 2009 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட Mama Do என்ற பாடல் இளசுகளில் மனதினை அதிகமாக கொள்ளை கொண்டது. மேலும் இவர் வெளியிட்ட 6 ஆல்பம், சிறந்த 10 ஆல்பங்களில் வரிசையில் இடம்பிடித்துள்ளது, FHM வெளியிட்ட கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலிலும் 2010 ஆம் ஆண்டில் No. 2011 ஆம் ஆண்டில் No. 31 2012, ஆம் ஆண்டில் No. 12 மற்றும் 2013- 2014 ஆம் ஆண்டில் No. 7 என தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.
Amber Heard

அமெரிக்காவின் ஹாட்டான நடிகை. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பல்வேறு நாளிதழ்களின் அட்டைப்படங்களில் இவரது புகைப்படம் அதிகமாக இடம்பெறுவது இவரது சிறப்பு. திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
Priyanka Chopra

பாலிவுட் நடிகையான இவர் முன்னாள் உலக அழகி ஆவார். கடந்த 2015 ஆண்டு வெளியான ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். பாலிவுட் உலகில் தனது அசாத்திய நடிப்பால் பல்வேறு விருதுகளை குவித்துள்ள இவர், இந்தியாவின் மிகப்பிரபலமான நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவின் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
Emilia Clarke

28 வயதான இந்த அழகு தேவை கடந்த ஆண்டும் அழகிகள் பட்டியலில் 9 ஆம் இடத்தில் தான் இருந்தார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து விருதுகளையும் குவித்துள்ளார்.
Pia Wurtzbach
