அஜந்தவின் சாதனையினை இளம் வீரர் குசல் வீழ்த்தி சாதனை..

சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆட்டநாயகன் விருதினை குசல் மென்டிஸ் நேற்றைய(27) தினம் தட்டிச்சென்றார்.

அது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டநாயகனாக விருது வாங்கும் இளமையான இலங்கை வீரர்  என்ற வகையிலாகும்.

இதற்கு முன்னதாக குறித்த சாதனையினை அஜித் மென்டிஸ் கைப்பற்றியிருந்தார். அவர் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியின் போதேயாகும், அப்போது அவருக்கு 23 வயதாக இருந்தது.

இம்முறை முக்கோணத்தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான ஆட்ட நாயகன் விருதினை பெற்ற குசல் மென்டிஸ் இனது வயது 21என்பதும் குறிப்பிடத்தக்கது.

1) குசல் மென்டிஸ் – வயது 21 நாட்கள் 300 – Zimbabwe tri series 2016
2) அஜந்த மென்டிஸ் – வயது 23 நாட்கள் 117 – Asia cup 2008
3) லஹிரு திரிமன்ன – வயது 24 நாட்கள் 184 – Asia cup 2014
4) மாவன்  அதபத்து – வயது 25 நாட்கள் 271 – Emirates tri series 1998
5) சனத்  ஜெயசூரிய – வயது 26 நாட்கள் 260 – Cricket world cup 1996
6) சனத்  ஜெயசூரிய – வயது 27 நாட்கள் 332 – Independence cup 1997
7) மஹேல ஜெயவர்தன – வயது 28 நாட்கள் 74 – Indian oil cup 2005
8) ரொஷான் மஹாநாம – வயது 29 நாட்கள் 142 – Singer tri series 1995