மாத்தறை நில்வளா கங்கை திட்ட மோசடி – நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல்..

மாத்தறை நில்வளா கங்கை திட்டத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கடந்த சனிக்கிழமை(26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டிருந்தார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது குறித்த இந்த மோசடி தொடர்பான விபரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாத்தறை நில்வளா கங்கை திட்டத்திற்காக திறைசேரியிலிருந்து ரூ.3012 மில்லியன் பெறுமதியான காசோலை ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் பீஜிங் தலைநகரில் வைத்து தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நிதி மோசடி விசாரணை பிரிவினர் பீ அறிக்கை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் நில்வளா திட்டத்தின் பெயரில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கியின் கணக்குகள் விபரங்களை ஆராய்வதற்கே பீ அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.