மேத்யூஸ் இனை புறந்தள்ளிய லொகுஹெட்டிகே காலினை முறித்து சாதித்தது இப்படித்தான்.. (PHOTOS)

அமெரிக்காவில் நடைபெறும் திறந்த இருபது ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக தில்ஹார லொகுஹெட்டிகே சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று(28)  நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க ஒல்ச்டார் அணிக்கு தலைமை தாங்கிய லொகுஹெட்டிகே 20 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை பெற்றதோடு, 13 ஓட்டங்களில் ஒரு விக்கெட் இனையும் கைப்பற்றியிருந்தார்.

ஒல்ச்டார் அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை குவித்தவரும் லொகுஹெட்டிகே ஆவார்.

ஆப்கானிஸ்தான் வீரர்களின் அணியான, செதும்லத் அல் மசாபி அணியானது, அமெரிக்காவின் ஒல்ச்டார் அணியினை எதிர்த்து ஆடியதில் 4 ஓட்டங்களில் தோல்வியினை தழுவியது.

அவ்வணிக்கு பாகிஸ்தான் வீரர்களான சஹீத் அஜ்மல் மற்றும் ஹசன் ராசாத் ஆகியோரும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

தான் நேற்றைய தினம் களத்தடுப்பில் இருக்கும் போதே காலில் உபாதைக்கு ஆளாகியதாக லொகுஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

தேர்வு குழுவின் மற்றும் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரால் தனக்கு விடுக்கப்படும் குற்றச்சாட்டுகளாலும் மற்றும் தொடர்ந்தும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறி தில்ஹார  லொகுஹெட்டிகே சமீபத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

15302425_10211426091994310_2145652240_o

15224723_10211426092034311_1017314867_o

15240320_10207765240464307_1764772904_n

15300640_10207765226783965_1125312153_n

15301113_10211426067953709_262631447_n