திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் மணப்பாறை அருகே உள்ள அம்மாபேட் டையை சேர்ந்த ரூபன் (வயது 30) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அந்த மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து ஆசிரியர் ரூபனும் கழிவறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அலறியபடி அந்த மாணவி வெளியில் ஓடி வந்துள்ளார். பின்னர் மாலை வீட்டுக்கு சென்ற மாணவி கழிவறையில் தன்னிடம் ஆசிரியர் ரூபன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50–க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து ரூபனை அழைத்து பள்ளி நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் ரூபனை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் ரூபனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்த போது மாணவி கழிவறைக்கு சென்ற போது அவரது பின்னால் ரூபனும் உள்ளே சென்றதும் பின்னர் சிறிது நேரத்தில் மாணவி கதறி அழுதபடி வெளியே ஓடிவந்த காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் மற்றும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிரியர் ரூபனை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் பொலிஸார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து மாணவிக்கு நேற்றிரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியர் ரூபனை இன்று பொலிஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். ஆசிரியர் ஒருவரே பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் background யார்?????????????????????????????????????
இவனின் இளமை பருவம் எவ்வாரு இருந்து இருக்கும்