காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டே இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
புதிய சுற்று வட்டம் நீர் அலங்காரம் மற்றும் மின் விளக்கு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இவை இரவு நேரத்தில் ஔிரவிடப்படவுள்ளமை சிறப்புக்குரியது.
இலங்கையின் அடையாளத்திற்கு இதுவும் ஒரு சின்னமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.