கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி..

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதியளித்தது. சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே  இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் இன்று(01) இந்த அனுமதியை வழங்கியுள்ளதோடு குறித்த வழக்கினை பெப்ரவரி 13ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.