மேல் கொத்மலை நீர்த்தேக்கமும் பொய்யான வாக்குறுதிகளும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையென, தெரிவித்து இன்று வியாழன் (18) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தலவாக்கலை – மேல்கொத்மலை நீர் மின் திட்ட காரியாலயத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தாங்கள் வாழ்ந்த வீடுகளில் சகல வசதிகளும் இருந்ததாகவும் வீட்டிற்கு முன்பதாக போதியளவு இடம் இருந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இத் திட்டம் ஆரம்பிக்கும் போது, இம் மக்களிடம் சகல வசதிகளுடன் வீடு அமைத்து தருவதாகவும் தண்ணீர் வசதி, வீட்டிற்கு முன்பதாக போதிய இட வசதி என்பன பெற்றுத் தருவதாகவும் கூறிய போதிலும், திட்டம் முடிவடைந்ததும் இம் மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் போதிய வசதி இல்லை எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சம்மந்தப்பட்ட அலுவலகத்தின் அபிவிருத்தி திட்ட அதிகாரியை சந்தித்து ஆர்ப்பாட்டகாரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றதோடு தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றபடாத சந்தர்ப்பத்தில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும்  தெரிவித்தனர்.

One thought on “மேல் கொத்மலை நீர்த்தேக்கமும் பொய்யான வாக்குறுதிகளும்

  1. இவனின் இளமை பருவம் எவ்வாரு இருந்து இருக்கும்

Comments are closed.