இலங்கையில் பலவீனமான அமைச்சராக மங்கள! கோத்தபாயவிடம் அடிபணிவாரா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான தகவல் ஒன்று நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க பணத்தில் கோத்தபாயவின் புதல்வர் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த கருத்து குறித்து கோத்தபாய கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எவன்கார்ட் வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோத்தபாய இன்று நீதிமன்றில் ஆஜராகி இருந்தார். இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

“நான் எதற்கு வாடகைக்கு வீடு பெற்றுக் கொள்ள வேண்டும். நான் மோசடி செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றார்கள். அப்படி என்றால் அந்த பணத்தில் வீடு ஒன்று கொள்வனவு செய்து மகனுக்கு கொடுக்க முடியும்.

இது மிகவும் கீழ்த்தனமான அரசியல். இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆவார்.

என்ன செய்தாலும் இறுதியில் என்னிடம் தான் ஓடிவர நேரிடும். இதற்கு முன்னரும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைவதற்காக அவர் ஓடி வந்தார். அதேபோல் எதிர்காலத்திலும் ஓடி வர நேடிடும் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.