முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு பரிந்துரைகள் இல்லை – ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்ஷ அவர்களுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு  பரிந்துரை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளதாக கெபினட்  அமைச்சர் ராஜித சேனாரத்ன  இன்று (18) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.

ஒரு தடவையல்ல இரு தடவைகள் மஹிந்த ஜனாதிபதியினை சந்தித்தார் என்பதனையும் இங்கு அவர் சுட்டிக்காட்டினார்.

முதல் சந்திப்பில், பிரதம வேட்பாளர் பதவியையும் , இரண்டாம் சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான அனுமதியையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கூறுகையில்; முன்னாள் ஜனாதிபதியின் கனவு பலிக்காது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

4 thoughts on “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு பரிந்துரைகள் இல்லை – ஜனாதிபதி

  1. மஹிந்தவுக்கு இடமில்லா விட்டால் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்க திட்டமாம்

    1. மஹிந்தவுக்கு இடமில்லா விட்டால் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்க திட்டமாம்

  2. இன்னும் அவனுக்கு பதவி ஆச போகல்லயா

Comments are closed.