நாடு தழுவிய ரீதியில் கூட்டு எதிர்க்கட்சியினால் போராட்டம் நடாத்த தீர்மானம்..

எதிர்வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்தக் கோரி நாடு தழுவிய ரீதியில் கூட்டு எதிர்க்கட்சியினால் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில்;

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தி விரட்டப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களாவர்.

இவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் நோக்கில் பாரியளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் ஊடகங்களுக்கு நேற்று(04) கருத்து வெளியிட்டிருந்தார்.