இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று(05) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலின் போது, கொழும்பு மாவட்ட கிரிக்கெட் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என நிசாந்த ரணதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீமதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், வழக்குடன் தொடர்புடைய இரு தரப்பினரும் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடும் நிபந்தனைகளின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.