நாளை(06) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை குறித்து ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படின் அறியத்தர 7 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 1911, 011 2 78 42 08, 011 2 78 45 37, 011 3 18 93 50 மற்றும் 011 3 14 03 14 எனும் தொலைபேசி இலக்கங்களூடாக பரீட்சை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
அது தவிர்ந்த, 011 2 42 11 11 மற்றும் 119 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
மேற்குறித்த தொலைபேசிகள் 24மணி நேரமும் பாவனையில் இருக்கும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.