இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
“எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நேற்று(05) இடம்பெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவு போன்றன தேவைப்படுகின்றது”
தனஞ்சய, குஷல் மென்டிஸ் போன்ற வீரர்கள் அவுஸ்திரேலியா போன்ற அணிகளுக்கெதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள். இவ்வாறான வீரர்களை உருவாக்கதுடன் வீரர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கே இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஓட்டங்களை குவிப்பதால் தேசிய அணியில் வீரர்களை தெரிவுசெய்ய முடியாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தமது மூளையை பாவித்து தன்னம்பிக்கையுடன் விளையாடுபவர்களே எதிர்காலத்தில் தேசிய அணியில் இடம்பிடிப்பர் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.