பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய IPஇனது பணி இடைநீக்கம்

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து மூன்று துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இவற்றில் இரண்டு குற்றவாளிகள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே, பிரதான பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.