தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்; புலிகளுக்கு மட்டுமல்ல இலங்கை இராணுவத்துக்கும் இஸ்ரேலே பயிற்சியளித்தது.
இருதரப்பினரையும் ஒரே இடத்தில் வைத்தே பயிற்சியளித்தது. அது வெளிப்படையானதாகும்.
எனினும், இந்த விவகாரத்தை இஸ்ரேல் அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்லது பயிற்சியளித்த மொசாக் அமைப்போ இதுவரையிலும் மறுதலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.