அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்..

அத்தியாவசிய ஔடதங்கள் 48 ன் விலை குறைப்பின் காரணமாக சுமார் 6 பில்லியன் ரூபா வர்த்தக இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிற்கு தேவையான ஔடதங்களை உற்பத்தி செய்யும் ஹொரண பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் சிலவற்றுக்கு இன்று(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் , 2019ம் ஆண்டளவில் இந்நாட்டிற்கு தேவையான அனைத்து ஔடதங்களையும் இந்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளுதல் தமது அமைச்சின் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.