ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது சத்தியாகிரகப் போராட்டம் தொடர்கிறது..

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் இன்றும்(14) தொடர்ச்சியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துறைமுக அதிகார சபையில் தம்மை இணைக்குமாறு கோரி, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சிலர் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சியினால் தமது தொழில் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.