கண்டியில் இருந்து கொழும்பு வரை பயணித்த கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனத்தில் பயணித்த யுவதி ஒருவர் போக்குவரத்து சட்டங்களை மீறி செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
போக்குவரத்து சட்டம் மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த யுவதி, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயின் மகளும் யோஷித ராஜபக்சவின் காதலியுமான யோஹான ரத்வத்தே என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
22 வயதான அவர் அண்மையில் மேலும் சில இளம் பெண்களுடன் கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்று கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது போக்குவரத்து சட்டத்தை மீறியதுடன், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தை பின் தொடர்ந்து பல கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர், பஸ்யால சந்தியில் வைத்து டிபெண்டர் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது தான் குறித்த அரசியல்வாதியின் மகள் எனவும், சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அவரது வாகன அனுமதி பத்திரம் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் யோஹானாவின் தாயாரும் வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.