பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறில் தொடர்ந்தும் நீடிப்பு..

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(14) காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.