5வது மற்றும் இறுதி டெஸ்ட் – ஆண்டர்சன் திடீர் விலகல்..

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(16) சென்னையில் ஆரம்பமாகிறது.

சென்னையை கடந்த திங்கள் கிழமை தாக்கிய வர்தா புயல் காரணமாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமும் சிறியளவில் பாதிப்படைந்தது.

இதனால் இரு அணி வீரர்களும் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது. புதன்கிழமை முழுவதும் இரு அணியினரும் ஹோட்டலுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ) அறிவித்துள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்த வருட விளையாடிய டெஸ்டுகளில், ஐந்தில் காயம் காரணமாக ஆண்டர்சன் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணி அடுத்த ஜூலை மாதம்தான் அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. இந்தத் தொடரில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

எனவே அவருடைய விலகலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.