வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை தென்னிந்தியாவில் நடைபெறவுள்ள ஆலய உற்சவமொன்றில் கலந்து கொள்வதற்காக செல்லும் பக்தர்களின் நலனுக்காக இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்அந்த நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இந்த பயணத்திற்காக பயண சீட்டு, விஸா மற்றும் கப்பலுக்கான கட்டணம் ஆகியவற்றைஇந்த உற்சவத்திற்கு செல்லும் பக்தர்கள் பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்கும் எண்ணம் காணப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.