UPDATE – துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை -முழுமையான காணொளி…

துருக்கிக்கான ரஷ்யாவின் தூதுவர் அன்றெய் கார்வோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்நாட்டின் காவற்துறை அதிகாரி ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் அலெப்போ நகரில் இடம்பெறும் மனிதாபிமான செயற்பாடுகளுடன் ரஷ்யா கொண்டுள்ள தொடர்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் அன்கரா பிராந்திய கலகம் அடக்கும் காவற்துறையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் ஏதேனும் குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளாரா? என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை.

 

குறித்த காணோளியின் முழு இணைப்பு..

[youtube url=”https://www.youtube.com/watch?v=5rXczNWzL1o” width=”560″ height=”315″]